அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இளையக்கண்ணு, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்துள்ளார். ஏற்காடு தொகுதியில் 2001 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த இளையக்கண்ணு, தற்போது சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.