திமுக கூட்டணியில் இணைந்த பிறகு முதல்முறையாக மத்திய அரசை பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்துக் கருத்து தெரிவித்த அவர், சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் வயிற்றை மத்திய அரசு எரிய வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மக்களின் வருமானம் மட்டும் குறைந்து கொண்டே போவதாகவும், இந்த நிலையை மத்திய அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
