ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை மீனாட்சி சவுத்ரி, குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். விஜய் நடித்த ‘தி கோட்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ மற்றும் வெங்கடேஷின் ‘சங்கராந்தி வாஸ்துனம்’ என இவர் நடித்த படங்கள் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளன.
முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் மீனாட்சி, தற்போது சினிமா வட்டாரத்தில் ஒரு ‘லக்கி ராசி’ கொண்ட நடிகையாகப் பார்க்கப்படுகிறார்.
தற்போது தனது திருமணம் குறித்த விசித்திரமான நிபந்தனைகளைத் தெரிவித்து மீனாட்சி சவுத்ரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் நபருக்குக் குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்றும், அவருக்குச் சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, துணி துவைப்பது, இஸ்திரி செய்வது மற்றும் வீட்டின் அனைத்து வேலைகளையும் அவரே கவனிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். நடிகையின் இந்த அதிரடி நிபந்தனைகள் சமூக வலைதளங்களில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
