கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு நிம்மதியைத் தந்துள்ளதோடு, காமக் கொடூரர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
