சமூக வலைதள மோகத்தால் சிறுவர்களின் எதிர்காலம் பாழாவதைத் தடுக்க கர்நாடக அரசு தற்போது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தைக் கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை எப்படி நடைமுறைப்படுத்துவது மற்றும் பயனாளர்களின் வயதை எப்படித் துல்லியமாகச் சரிபார்ப்பது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
