பாசமுள்ள வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரைப் பணையம் வைத்து, தன் எஜமானரின் உயிரைக் காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. ‘ஜிம்மி’ என்ற நாய், தன் எஜமானரைத் தாக்க வந்த ஒரு ஆபத்தான பிளாக் கோப்ரா பாம்பைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடியுள்ளது.

இதுகுறித்து வெறும் 25 வினாடிகள் நீடித்த இந்த உக்கிரமான சண்டையில், அந்தப் பாம்பைக் கடித்துக் குதறி தன் எஜமானரின் குடும்பத்திற்கு வரவிருந்த பேராபத்தைத் தடுத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பாம்பின் கொடிய விஷம் ஏறியதால், தன் கடமையைச் செவ்வனே முடித்த சில நிமிடங்களிலேயே அந்த நாய் பரிதாபமாகத் தன் உயிரைத் துறந்தது.

“>

மேலும் தன் உயிரைக் கொடுத்து எஜமானரின் குடும்பத்தைக் காத்த ஜிம்மியின் இந்தச் தியாகம் அந்தப் பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வளர்ப்புப் பிராணி தன் நன்றிக்கடனையும் விசுவாசத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்குச் செயலில் காட்டியுள்ளது.

இந்நிலையில் தன்னை வளர்த்தவர்களின் உயிரைக் காக்கத் தன் சொந்த உயிரையே தியாகம் செய்த இந்த ஜிம்மி நாயின் அசாதாரண தைரியத்தையும் பாசத்தையும் சமூக வலைத்தளங்களில் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி, அதற்குத் தங்களின் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.