கர்நாடக மாநிலம் துமகுரு அருகே உள்ள தாசரஹள்ளி கிராமத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு நபரின் மரணத்தில் ஒளிந்திருந்த திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளியாகி அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது.
தனது கணவர் ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய ஆஷா என்ற பெண், கணவர் இறந்த 19-வது நாளிலேயே தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதுதான் இந்த விவகாரத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அண்ணனின் திடீர் மரணம் மற்றும் அண்ணி ஆஷாவின் அவசரத் திருமணத்தால் அதிர்ச்சியடைந்த அந்த நபரின் தங்கை, போலீசில் புகார் அளிக்க, வட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் அந்த நபர் மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத் திணற வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.
காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை நள்ளிரவில் காதலனுடன் சேர்ந்து ஆஷா தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலமானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் ஹெப்பலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
