ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 3 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவத்தின் போது, அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு கீழே விழுந்த குழந்தையைத் தன் கைகளில் ஏந்திப் பிடித்துக் காப்பாற்றினார். 5-வது மாடியில் இருந்து விழுந்தும், அந்த நபரின் துரித நடவடிக்கையால் குழந்தை எந்தவித காயமுமின்றி உயிர் தப்பியது ஒரு அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

​சமூக வலைதளங்களில் இந்த நெகிழ்ச்சியான வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அந்த நபரின் வீரத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “சரியான நேரத்தில் தேவதூதனைப் போல வந்து குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்” என இணையவாசிகள் அந்த நபருக்குப் புகழாராம் சூட்டி வருகின்றனர். இந்த மிரள வைக்கும் வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.