நடிகர் விஜய் – சங்கீதா தம்பதியின் விவாகரத்து குறித்த வதந்திகள் கோலிவுட் வட்டாரத்தில் ஓயாத நிலையில், இன்று சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாகப் பங்கேற்றுள்ளனர்.
விஜய் பாரம்பரியமான பட்டு வேட்டி, சட்டையில் ஜொலிக்க, அவருக்கு மேட்ச்சான உடையில் த்ரிஷா பக்கத்திலேயே கெத்தாக நடந்து வரும் வீடியோ இப்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ஒரே காரில் ஒன்றாக வந்திறங்கிய தவெக தலைவர் விஜய், திரிஷா!#Vijay #Trisha #Marriagefunction #Viralvideo #TVKvijay #Newstamil24x7 pic.twitter.com/u8miibYs5R
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) March 5, 2026
நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாகப் பங்கேற்றுள்ளதைப் பார்த்த ரசிகர்கள், “இவங்க கெமிஸ்ட்ரியே தனி தான்” என கமெண்ட்களைத் தட்டி விடுகின்றனர்.
ஏற்கனவே இவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வலம் வரும் நிலையில், இன்று அவர்கள் ஒன்றாகத் தோன்றியது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
