சிறுவயதில் நாம் அனைவரும் காகித அட்டையிலோ அல்லது செல்போனிலோ ‘ஸ்நேக் அண்ட் லேடர்’ எனப்படும் பரமபதம் விளையாடி இருப்போம். ஆனால், ஒரு பெண் நிஜப் பாம்புகள் நெளியும் அறைக்குள் இறங்கி, உயிருடன் இந்த விளையாட்டை விளையாடியுள்ள சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தரையில் பெரிய பரமபதக் கட்டங்கள் வரையப்பட்டு, ஆங்காங்கே நிஜப் பாம்புகள் விடப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Rahila Rashid (@_shilpi_rahila)

இதில் அந்த இளம்பெண் ஒரு காயாக மாறி, பகடையை உருட்டி வரும் எண்களுக்கு ஏற்ப கட்டங்களில் குதித்துச் செல்கிறார். அவர் ஒவ்வொரு முறை குதிக்கும்போதும் அங்கிருக்கும் பாம்புகள் பயத்தில் அவர் மீது சீறுவதும், துள்ளிக் குதிப்பதுமாக இருக்கின்றன.

இந்த பகீர் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா? இது மிகவும் ஆபத்தானது” என எச்சரித்து வருகின்றனர். தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, பார்ப்பவர்களை ஒரு நிமிடம் மிரள வைத்துள்ளது.