வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிய குட்டி கதையும், அதற்கு பிக் பாஸ் ஜூலி கொடுத்த பதிலடியும் தான் இப்போது சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக். விஜய் சொன்ன காளை கதையைக் கிண்டல் செய்த ஜூலி, “விஜய்ணா, நீங்க பாட்டுக்கு கதை சொல்லிட்டீங்க, இதைக் கேட்டுட்டு உங்க கட்சி மைனர்கள் காளைகிட்ட புல்லுக்கட்டோட போய் ஏதாவது விபரீதம் ஆயிட்டா என்ன பண்றது?” எனப் பொரிந்து தள்ளினார். இதற்குக் கடுப்பான விஜய் ரசிகர்கள், ஜூலியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க, பதிலுக்கு ஜூலி, “என்னை மிரட்டாதீங்க, நான் பயப்பட மாட்டேன். வேணும்னா பனையூருக்கே வர்றேன்” என சவால் விட்டு அடுத்த வீடியோவை தட்டிவிட்டார்.
நிலைமை இப்படியிருக்க, ஜூலிக்கு இது மூன்றாவது திருமணம் என விஜய் ரசிகர்கள் கிளப்பிவிட, அதற்கு ஜூலி கொடுத்த பதிலடி தான் உச்சக்கட்ட கிண்டல். தனது கணவர் இக்ரீமை காட்டி, “இதற்கு முன்பு சீரியலிலும் படத்திலும் தான் எனக்கு கல்யாணம் நடந்தது, தவெக ‘வல்கர் வாரியர்ஸ்’ கணக்குப்படி இது எனக்கு 3-வது கல்யாணமாம்” என நக்கலடித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் இப்படித் தப்பு தப்பாக எதையாவது ஊதிவிட்டு உங்கள் தலைவரின் டெபாசிட்டை காலி பண்ணிடாதீங்க என அதிரடி காட்டியுள்ளார். ஜூலியின் இந்த துணிச்சலான பதிலடியும், அவர் பதிவிட்டுள்ள வீடியோக்களும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
