சமூக வலைதளங்கள் எப்போதும் விசித்திரமான மற்றும் திறமைமிக்க மனிதர்களின் சங்கமமாகவே இருக்கிறது. நாம் வேலை பார்த்துக் கொண்டே உலகெங்கிலும் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை இதன் மூலம் ரசிக்க முடிகிறது.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக மக்கள் சப்பாத்தி தேய்ப்பதற்கு பலவிதமான ஐடியாக்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த வீடியோவில் ஒரு பெண் செய்துள்ள தற்காலிக ஏற்பாடு மிகவும் வித்தியாசமானது.

அந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் சப்பாத்தி தேய்ப்பதற்குப் பலகைக்கு பதிலாக ‘வெயிங் மெஷின்’  பயன்படுத்துவதைக் காண முடிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Thanga Rasu (@thanga4697)

“>

“டாக்டர் அளந்து சாப்பிடச் சொன்னார், அதான் இப்படிச் செய்கிறேன்” என்றும், “இத்தனை நாட்களாக நான் இந்த மெஷினை தப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘thanga4697’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.