கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், உணவகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபிமொல் (37) என்ற தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த லைஜு, ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துவிட்டு, பின்னர் பைக்கில் சென்று அரசுப் பேருந்து மீது மோதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயமடைந்த லைஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் சடலமாகக் கிடந்த தாயாரைக் கண்டு பிள்ளைகள் கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
