மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில், 7 மாதக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற மாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மாமி சானியா பிரவின் மற்றும் குழந்தையின் ஆத்தா-பாட்டனார் என மூவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குடும்பத்தில் ஏற்பட்ட தங்களது உறவுமுறை தொடர்பான தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த மாமி சானியா பிரவின், குழந்தையைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சென்று தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
