பெங்களூரு டெக்கி ஒருவர் தனது வீட்டில் மாயமான பழங்களைக் கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமையல்காரரைப் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது வீட்டு சமையலறையில் இருந்த பழங்கள் தொடர்ந்து காணாமல் போவதை கவனித்த அந்த இளைஞர், சாதாரணமாக சிசிடிவி வைப்பதற்குப் பதிலாக, ‘ஸ்மார்ட் ஹோம்’ வசதியுடன் கூடிய AI கண்காணிப்பு அமைப்பை நிறுவினார்.

​இந்த AI சிஸ்டம், சமையலறையில் நடக்கும் அசைவுகளைத் தொடர்ந்து கண்காணித்து, வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் நடக்கும்போது மட்டும் எச்சரிக்கை (Alert) அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சில நாட்களில், அந்த சமையல்காரர் குறிப்பிட்ட நேரத்தில் அலமாரிக்குச் சென்று பழங்களைத் திருடி தனது பையில் வைப்பதைப் படம் பிடித்துக் காட்டியது. ஆதாரங்களுடன் சிக்கிய அந்தப் பெண் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்தச் சம்பவம் வீட்டுப் பாதுகாப்பில் AI-ன் அவசியத்தை உணர்த்தினாலும், வீட்டுப் பணியாளர்களின் ‘தனியுரிமை’ (Privacy) குறித்த புதிய விவாதத்தையும் தொடங்கியுள்ளது.