கிரிக்கெட் உலகில் உச்சக்கட்ட சாதனையாக கருதப்பட்ட விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 319 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார்.

இந்த பிரம்மாண்ட சாதனையை தற்போது பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் சஹிப்சாதா ஃபர்ஹான் தகர்த்தெறிந்துள்ளார். நடப்புத் தொடரில் அபாரமாக விளையாடிய ஃபர்ஹான், மொத்தம் 383 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கோலியின் சாதனையை முறியடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஃபர்ஹான் தற்போது புதிய வரலாறு படைத்திருக்கிறார்.