ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவின் பர்வா (Barwa) நகரில் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் இந்தி மொழியில் “சைடுல போங்க.. ஓடுங்க!” (Side pe ho jao, Bhaago) என்று கத்தியபடி மக்களை எச்சரிக்கிறார்.

அவர் பேசும் போதே, அவருக்குப் பின்னால் ஒரு பெரிய ஏவுகணை விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது. இதைப் பார்த்த அவர் “ஓ மை காட்” என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார். அந்த நபர் சரளமாக இந்தியில் பேசுவதால், அவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.