ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) தாக்குதலுக்குப் பிறகு, தலைநகர் தெஹ்ரானில் பெண்கள் ஹிஜாப் இன்றி பொது இடங்களில் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மாளிகை மீது குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பல ஆண்டுகளாக நிலவி வந்த கடும் கட்டுப்பாடுகளை உடைத்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஏவுகணைகள் ராணுவ நிலைகளைத் தாக்கியபோது, சில இடங்களில் மக்கள் “I love Trump” என முழக்கமிட்டபடி ஆட்டம் போட்டனர். தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வந்த ஈரான் பெண்களுக்கு, இந்தத் தாக்குதல்கள் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இணைய முடக்கம் மற்றும் கடும் பாதுகாப்புப் பணிகளுக்கு மத்தியிலும் மக்கள் காட்டும் இந்தத் துணிச்சல் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
