2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்தார். குறிப்பாக, 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவோடு இணைந்துதான் அவர் செயல்பட்டு வந்தார். இருப்பினும், சமீபகாலமாக அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைச் செயல்பாடுகள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால்,தற்போது அவர் தனது அரசியல் பயணத்தை மாற்றிக்கொண்டு திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது பழைய அடையாளத்தையும் வலிமையையும் முழுமையாக இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியில் அடிப்படைத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாததோடு, தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான தலைமையே தற்போதைய அதிமுகவின் பலவீனத்திற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அதிருப்தியின் காரணமாகவே,தற்போது திமுக கூட்டணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
