ஆன்லைன் ஆப் மூலம் நாம் ஆர்டர் செய்யும் உணவுகள் மற்றும் பழங்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளருக்குக் கொண்டு செல்ல வேண்டிய ப்ளூபெர்ரி (Blueberry) பழ பாக்கெட்டைத் திறந்து, அதில் சில பழங்களை எடுத்துச் சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்த பின், மீதமுள்ள பழங்களை அப்படியே பேக் செய்து டெலிவரி செய்ய எடுத்துச் செல்கிறார்.
ऑर्डर डिलीवर करने से पहले ब्लू बैरी निकाल कर खा लिया यह ब्लिंकिट डिलीवरी बॉय का कारनामा देखिए !!
क्या ब्लिंकिट वालों यही है कस्टमर के सामान की सुरक्षा।। pic.twitter.com/HmUvYAo0Pl
— Deepesh Patel (@Deepeshpatel87) February 24, 2026
இந்த அதிர்ச்சிகரமான காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். வீடியோ எடுப்பதைப் பார்த்தும் கூட அந்த டெலிவரி பாய் எந்தக் கூச்சமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்கிறார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தீயாய் பரவி வரும் நிலையில், “வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு இப்படி விளையாடலாமா?” எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
