மதுரையில் நேற்று (பிப்ரவரி 25) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவின் வாக்குகள் ஒருபோதும் சிதறாது என்றும், தற்போதைய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் மனதளவில் தயாராகிவிட்டனர் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தகுதியான ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்று குறிப்பிட்ட அவர், தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தேர்தல் நேரத்தில் எத்தனை புதிய கட்சிகள் அல்லது முகங்கள் வந்தாலும், அவை அனைத்தும் அதிமுகவின் பலத்திற்கு முன்னால் காணாமல் போய்விடும் என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.