15 வயதான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம் பிடித்து மிக இளம் வயது வீரராக சாதனை படைத்துள்ளார். அவர் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தாலும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ், வைபவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்பது குறித்துச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும் வைபவின் திறமையை பாராட்டிய டி வில்லியர்ஸ், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் (ரெட் பால் கிரிக்கெட்) சிறந்து விளங்க முடியும் என்றாலும், அதற்கு அவரிடம் அந்த அளவு விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளதா என்பதைப் பொறுத்தே அது அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
VIDEO | Former South Africa batter AB de Villiers did not read much into Vaibhav Sooryavanshi’s lack of experience and said he has broken down the door for national team selection.
The 15-year-old Sooryavanshi became the youngest ever to be selected for the Indian cricket team… pic.twitter.com/EZxpyLmgU0
— Press Trust of India (@PTI_News) June 8, 2026
“>
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறமை வைபவ்விடம் இருந்தாலும், வரும் காலங்களில் அவர் எந்த வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்பதுதான் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
