சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ரித்திகா சர்மா என்ற கன்டென்ட் கிரியேட்டர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும்போது, முஸ்கான் என்ற சிறுமி அவரிடம் வந்து ‘பெல் பூரி’ சாப்பிடுமாறு வற்புறுத்துகிறாள். தன்னிடம் பணம் இல்லை என்று ரித்திகா கூறியபோது, அந்தச் சிறுமி சற்றும் யோசிக்காமல் தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து ஒரு பிளேட் பெல் பூரி வாங்கிக் கொடுக்கிறாள்.
In a garden near a food stall, a little child noticed a girl passing by.
CHILD: Didi taste this.
GIRL : Who will pay for it?
CHILD (confidently): "I will pay" 🫡
Despite her refusals, kid kept asking
When she finally took a bite, kid's face lit up with pure selfless joy 🥹 pic.twitter.com/70EqRP7hFH
— News Algebra (@NewsAlgebraIND) February 23, 2026
ரித்திகா மறுத்தபோது, “நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்” என்று அந்தச் சிறுமி மழலை மாறாமல் சொன்ன வார்த்தை பார்ப்பவர்களைக் கண் கலங்க வைத்துள்ளது. தெருவோரச் சிறுமியாக இருந்தாலும், தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு காசும் எவ்வளவு முக்கியம் என்பதை விட, மற்றவர்களின் மகிழ்ச்சியே முக்கியம் என அந்தச் சிறுமி காட்டிய பெருந்தன்மை, “உண்மையான செல்வம் என்பது பணப்பையில் அல்ல, இதயத்தில் இருக்கிறது” என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
