திருவண்ணாமலையில் ஒரு ஸ்கூட்டர் செய்த ‘அட்ராசிட்டி’ தற்போது இணையதளங்களில் விமர்சனத்தையும் அதே சமயம் பீதியையும் கிளப்பியுள்ளது.
சாலையில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் அந்த ஒரு வண்டியைப் பார்த்ததுமே, “யப்பா சாமி.. ஓரமா போயிடுங்க!” என்று அலறி அடித்துக் கொண்டு தங்கள் வண்டிகளை ஓரம் கட்டிய வீடியோ தான் இப்போது செம வைரல். அப்படி அந்த ஸ்கூட்டரில் என்னதான் இருந்தது தெரியுமா? அந்த ஸ்கூட்டரின் பின்னால் கட்டப்பட்டிருந்த ஒரு ராட்சத நீளமுள்ள இரும்பு ஒரு நீண்ட கம்பியானது, வண்டி போகும் திசையில் இல்லாமல் குறுக்காகப் நீட்டிக் கொண்டிருந்தது.
Viral Video “ஓரமா போ.. ஓரமா போ..’’ – வண்டியை பார்த்ததும் பதறிப்போய் ஓரங்கட்டிய அக்கம் பக்க வண்டிகள் #thiruvannamalai #scooter #viralvideo pic.twitter.com/sILKRpTY7d
— Thanthi TV (@ThanthiTV) February 24, 2026
“>
அந்த வண்டி லேசாகத் திரும்பினாலும், அருகில் வருபவர்கள் மீது அந்தப் பெரிய கம்பி மோதும் அபாயம் இருந்ததால், பின்னால் வந்த கார் மற்றும் பைக்குகள் அனைத்தும் உயிர் பயத்தில் அந்த வண்டியை முந்தக் கூட அஞ்சித் தூரத்திலேயே நின்றுவிட்டன. திருவண்ணாமலையின் பரபரப்பான சாலையில் எந்தக் கவலையும் இல்லாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிச் சென்ற விதம், சாலை பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
