கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பலமுறை சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுத்து இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஸ்டீவ் பக்னர். தற்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-04 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சினுக்கு வழங்கிய அந்த அவுட் தவறானது என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
”வாழ்க்கையில் தவறுகள் நடப்பது சகஜம்தான், ஆனால் நான் செய்த அந்த ஒரு தவறை மக்கள் இன்றும் மறக்காமல் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது” என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சச்சின் சதத்தை நோக்கிச் சென்ற பல தருணங்களில் பக்னரின் தவறான தீர்ப்புகள் முட்டுக்கட்டையாக இருந்ததை இந்திய ரசிகர்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.
