பெரு நாட்டின் அரேக்விபா பகுதியில் மீட்புப் பணிகளுக்காகச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 7 குழந்தைகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ‘பிஸ்கோ’ (Pisco) நகரிலிருந்து ‘சாலா’ (Chala) நோக்கிப் பயணித்த Mi-17 ரக ராணுவ ஹெலிகாப்டர், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான வானொலி தொடர்பை இழந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், திங்கட்கிழமை அதிகாலை காரவெலி (Caraveli) மாகாணத்தில் உள்ள சாலா விஜோ என்ற இடத்தின் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது.