அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 100 ரன்களைக் கடக்கும் முன்பே ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சொதப்பிய இந்திய அணி, 188 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்ட முடியாமல் இந்தத் தொடரின் தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரசிகர்களால் கடும் அதிருப்தி அடைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திய வீரர் சிவம் துபே அடித்த சிக்ஸர் பந்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் திருப்பித் தர மறுத்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
First fielder to take three catches in the same over in a T20I 🤯
Tristan Stubbs’ safe pair of hands in the 15th over against India put him in the record books 🙌
Watch it here ▶️ https://t.co/ymlMwRhYq4 pic.twitter.com/DXwG2NxZzU
— ICC (@ICC) February 23, 2026
“>
இதனால் கோபமடைந்த ஸ்டப்ஸ், எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்று ரசிகர்களை நோக்கி விரல் காட்டி பந்தை வீசும்படி ஆக்ரோஷமாகச் சைகை செய்தார். ஒரு கட்டத்தில் அவரே வேலி மீது ஏறி பந்தை எடுத்து வரத் துணிந்தது போன்ற அவரது உடல்மொழி, மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
