2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வலைப்பயிற்சியில் பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் தொடரில் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சோபிக்காத பாபர் அசாம், தற்போது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் களம் இறங்கியிருப்பதை நெட்டிசன்கள் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

“அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாபர் அசாம் ‘பிளான் பி’ கையில் எடுத்துள்ளார்” என்றும், “வலைப்பயிற்சியில் 91 சதங்கள் அடித்த பிறகு இப்போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தப் போகிறார்” என்றும் சமூக வலைதளங்களில் கேலிப் பேச்சுகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவிருந்தது, ஆனால் மழையினால் அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

இதனால் அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு எதிரான நாளை நடக்கும் போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் இக்கட்டான ஒன்றாக மாறியுள்ளது.

“>

 

மறுபுறம், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, வலுவான ரன் ரேட்டுடன் நம்பிக்கையுடன் உள்ளதால் நாளைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.