கர்நாடக மாநிலத்தில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஆல்பிரட் என்பவர் தங்கியுள்ளார். இவர் தனது நண்பருக்குப் பரிசளிப்பதற்காக பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் 60,990 ரூபாய் மதிப்பிலான கேமராவை ஆர்டர் செய்திருந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு வந்த பார்சலை ஆவலுடன் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே கேமராவுக்குப் பதிலாக அரை கிலோ எடை கொண்ட இரண்டு சலவைத்தூள் பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.விலையுயர்ந்த கேமராவிற்குப் பதில் சோப்புத் தூள் வந்ததால் ஏமாற்றமடைந்த ஆல்பிரட், இது குறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் உடனடியாகப் புகார் அளித்தார்.

ஆனால், அவரது புகாருக்கு அந்த நிறுவனம் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் ஷாப்பிங்கில் நடந்த இந்த நூதன மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.