தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தற்போது தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் காட்டும் அன்பு சில நேரங்களில் எல்லை மீறிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வேலூரில்  நடந்த ஒரு பொது நிகழ்வின் போது, விஜய்யின் கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த வெறித்தனமான ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி காரின் மீது தாவி ஏறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் கண்ணாடியில் முகம் பதித்து விஜய்க்கு முத்தம் கொடுத்துத் தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

“>

 

இதனால் ஒரு நிமிடம் நிலைகுலைந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தலைவர் மீது பாசம் இருக்கலாம், ஆனால் உயிரைப் பணயம் வைத்து இப்படிச் செய்வது முறையல்ல” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.