தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர்-8 ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த தருணத்தில், அவரது காதலி மகிஹா சர்மா காட்டிய எதிர்வினை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

188 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திலிருந்த ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஷிவம் துபேயுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்த பாண்டியா, 18 ரன்கள் எடுத்திருந்தபோது கேசவ் மகராஜ் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லைக்கோட்டில் டிரிஸ்டன் ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

மேலும் பாண்டியா அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது, கேமரா மைதானத்தில் இருந்த அவரது காதலி மகிஹா சர்மாவின் பக்கம் திரும்பியது. அப்போது பாண்டியா ஆட்டமிழந்ததை உணராமல் அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக மகிஹா உற்சாகமாக கைதட்டியது நேரலையில் ஒளிபரப்பானது. இக்கட்டான சூழலில் முக்கிய வீரர் அவுட் ஆனபோது அவர் காட்டிய இந்த ‘ ரியாக்ஷன் இந்திய ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.