இந்தியப் பயணிகளின் பொது ஒழுக்கம் மற்றும் நேர்மை குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது ரயிலில் நடந்த இந்தச் சுவாரசியமான, அதே சமயம் கண்டிக்கத்தக்கச் சம்பவம். ரயிலில் முட்டை பிரியாணி விற்றுக்கொண்டிருந்த வியாபாரியின் கவனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பயணி ஒருவர், ரயிலின் மேலடுக்கில் (Upper Berth) அமர்ந்துகொண்டே ஒரு பிரியாணி டப்பாவை யாருக்கும் தெரியாமல் அபேஸ் செய்துள்ளார்.
இந்தத் திருட்டை மிக லாவகமாகச் செய்த அந்த நபர், பின்னர் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி அந்தப் பிரியாணியை மிகவும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “இந்தியர்களின் பொது ஒழுக்கத்தை இனி ஒருபோதும் சரிசெய்யவே முடியாது” எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு ஏழை வியாபாரியின் உழைப்பைத் திருடிச் சாப்பிடும் இந்த மனநிலை, சமூகத்தின் விழுமியங்கள் எங்கே செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
