விலங்குகள் உலகத்தில் எப்போதுமே ஆதிக்கப் போர் என்பது சுவாரசியமானது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குட்டி யானையை காண்டாமிருகம் ஒன்று மிரட்டப் பார்க்கிறது. குட்டி யானை பயந்து ஓட, இதைக் கவனித்த தாய் யானை சும்மா இருக்குமா? அடுத்த நொடியே ஆக்ரோஷமாகப் பிளிறிக் கொண்டு காண்டாமிருகத்தை நோக்கித் திரும்ப, மிரட்ட வந்த காண்டாமிருகம் அப்படியே உறைந்து போய் நின்றது. ‘அம்மான்னா சும்மாவா’ என நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த 40 வினாடி வீடியோ, இணையத்தில் பல லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
Momma elephant has had enough of a curious rhino getting too close to her calf pic.twitter.com/0vVExfDH1e
— Nature Unedited (@NatureUnedited) February 20, 2026
தாய் யானையின் இந்த அதிரடி பதிலடியைக் கண்டு மிரண்டு போன காண்டாமிருகம், வந்த வழியே ஓட்டம் பிடித்தது. “காண்டாமிருகங்களுக்குப் பார்வை குறைவு என்பதால் எதையும் அருகில் சென்று பார்க்க முயலும், ஆனால் யானையிடம் இது போன்ற வேலைகள் பலிக்காது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, தன் குட்டிக்காக ஒரு மலை போன்ற யானை சீறிய விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
