டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் அவர் தடுமாறுவதை விட, சமூக வலைதளங்களில் அவர் மீது வீசப்படும் ட்ரோல்கள் தான் தற்போதைய ஹாட் டாபிக். குறிப்பாக, அபிஷேக் சர்மாவின் சகோதரி கோமல் சர்மா, தனது தம்பியை உற்சாகப்படுத்த மைதானத்திற்கு நேரில் வருவதையும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துப் பகிர்வதையும் நெட்டிசன்கள் சிலர் வன்மையாக விமர்சித்து வருகின்றனர்.
கோமல் சர்மா உடனிருக்கும் போது அபிஷேக் சரியாக விளையாடுவதில்லை என்றும், சகோதரியின் அதீதக் கவனிப்பு வீரரின் கவனத்தை சிதைப்பதாகவும் கூறி கோமல் சர்மாவை குறிவைத்து கடுமையான ட்ரோலிங் செய்து வருகின்றனர்.
விளையாட்டு வீரரின் தனிப்பட்ட உறவுகளை அவரது தோல்வியோடு முடிச்சுப் போடும் இந்தச் செயல், ஒருபுறம் கண்டனங்களைப் பெற்றாலும், மறுபுறம் சமூக வலைதளங்களில் இந்த விவாதம் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
