கிரிக்கெட் களத்தில், டி20 உலகக்கோப்பை தொடரில் 3 முறை ‘டக் அவுட்’ ஆகி விமர்சனத்திற்குள்ளான அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாகக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.

“அபிஷேக்கைப் பற்றி கவலைப்படுபவர்களைப் பார்த்து நான் கவலைப்படுகிறேன்; அவரை எதிர்கொள்ளப் போகும் அணிகளைப் பற்றித்தான் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன்” என்று சூர்யகுமார் கொடுத்த அந்த கெத்தான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.