தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5,000 டெபாசிட் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இந்தப் பணம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன், அதைப் பெறுவதற்காக வங்கிகளில் பெண்கள் அலைமோதியது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் கணக்கில் பணம் வந்தவுடன், அதை மத்திய அரசு எடுத்துவிடும் என்ற பயத்தில் தான் மக்கள் வங்கிகளில் குவிந்தனர்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நம் மீது வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைக்கும், மத்திய அரசு மீது அவர்கள் வைத்துள்ள அவநம்பிக்கைக்கும் இதுவே சாட்சி என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பணம் எங்கே போய்விடுமோ என்ற மக்களின் அச்சமே, மத்திய அரசின் மீதான அவர்களின் அதிருப்தியைக் காட்டுகிறது என்றும், திமுக அரசு சொன்னதைச் செய்யும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
