இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜிம்பாப்வே அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றின் 38-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை எதிர்கொண்ட ஜிம்பாப்வே, 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணிகளையே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே, தற்போது இலங்கையையும் தோற்கடித்து தோல்வியே காணாத அணியாக ‘சூப்பர்-8’ சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு சிறிய அணியாகக் கருதப்பட்ட ஜிம்பாப்வே, பெரிய அணிகளை வரிசையாக அடித்து துவம்சம் செய்து வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரின் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கத்துக்குட்டியாகப் பார்க்கப்பட்ட ஒரு அணி, அனுபவம் வாய்ந்த அணிகளுக்குத் தொடர்ச்சியாக ‘அதிர்ச்சி வைத்தியம்’ அளித்து வருவதால், இந்த உலகக் கோப்பைத் தொடர் தற்போது மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.