2026 டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் சதி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்விதான், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரைத் தூண்டிவிட்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட வைத்துள்ளார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சையத் அஷ்ரஃபுல் ஹக் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேசம் அடம் பிடித்ததால், ஐசிசி (ICC) அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது.

பின்னர் பாகிஸ்தானும் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என மிரட்டிய நிலையில், ஐசிசி கொடுத்த நெருக்கடியால் வேறு வழியின்றி பாகிஸ்தான் விளையாடி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றுப் போனது குறிப்பிடத்தக்கது.