இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசனில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணி வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில், நான்கு முக்கிய அணிகளை இந்தியத் தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்திய உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாஞ்செஸ்டர் ஒரிஜினல்ஸ் உள்ளிட்ட நான்கு அணிகளும் பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றாலும், இந்திய முதலீட்டாளர்களின் இந்த அதிரடி முடிவால் ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் போன்ற நட்சத்திர வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் மற்றும் தென்னாப்பிரிக்க லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து லீக் போட்டியிலும் இந்தத் தாக்கம் எதிரொலிப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
