திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

இன்று இரவு தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த முக்கியக் கூட்டத்தில், வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் விஜய் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.