உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அவர் தனது சக பெண் ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்ததை அறிந்த அவரது மனைவி மீனு நாகர், கடந்த சில நாட்களாக அவரைத் ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை, தனது கணவர் அந்தப் பெண் ஆசிரியையுடன் வெளியே செல்வதைக் கண்ட மீனு நாகர், புர்கா அணிந்து வந்து அவர்களை வழிமறித்தார். தனது தாய் மற்றும் ஒன்பது வயது மகளுடன் வந்த அவர், கணவரின் சட்டையைப் பிடித்து இழுத்து மக்கள் முன்னிலையில் சரமாரியாக அறைந்தார்.

“>

 

இதைக் கண்ட அந்தப் பெண் ஆசிரியை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.