சிவகங்கை மாவட்டம் நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரின் அராஜகச் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் பெட்டிக்கடை வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அந்த காவலர் முதியவரின் கடையை எட்டி உதைத்து அங்கிருந்த பொருட்களைச் சூறையாடியுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், காவல்துறையினரின் இத்தகைய போக்குக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இதுபோன்று அநாகரீகமாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.