சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை அதிரச் செய்ததோடு, பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஒரு பெண் தனது கணவரின் தலையை ‘சிவலிங்கமாக’ பாவித்து பூஜை செய்யும் காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் கழுத்து வரை தரையில் புதைக்கப்பட்டுள்ளார். அவரது தலை மட்டும் மண்ணுக்கு மேலே தெரிகிறது. அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அவரது மனைவி, கணவரின் தலையை சிவலிங்கமாக கருதி பயபக்தியுடன் பூஜை செய்கிறார்.
கணவரின் தலையில் மலர்களைத் தூவி, ‘ஹர் ஹர் மகாதேவ்’ என முழக்கமிட்டபடி, பால் அபிஷேகம் செய்கிறார் அந்தப் பெண். தரைக்குக் கீழே உடல் புதைக்கப்பட்டிருந்தாலும், அந்த நபர் எந்த சலனமும் இன்றி அமைதியாக பூஜைக்கு ஒத்துழைக்கிறார்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்: இதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. மக்கள் ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று புரியவில்லை” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மற்றொருவர், “ஒவ்வொரு பகுதிக்கும், பழங்குடியினருக்கும் தனித்துவமான வழிபாட்டு முறைகள் உள்ளன. மற்றவர்களின் நம்பிக்கையை கேலி செய்வது முறையல்ல. உங்களுக்குப் புரியவில்லை என்பதற்காக அது தவறாகிவிடாது” என ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதான் இன்க்ரெடிபிள் இந்தியா! கணவனே கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதுவே சாட்சி” எனச் சிலர் கிண்டலாகவும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாரம்பரிய சடங்கா அல்லது சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக (Viral) எடுக்கப்பட்ட வீடியோவா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எது எப்படியோ, ‘பக்திக்கும் எல்லை இல்லை, விசித்திரங்களுக்கும் பஞ்சமில்லை’ என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது.
