2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிமுக தனது பலத்தைப் பெருக்கி வரும் நிலையில், நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் முக்கிய இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு இபிஎஸ் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
300க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்
எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!! pic.twitter.com/GSgZkJlXkc
— Vinoth Pachaiyappan AIADMK (@vinoth124389) February 18, 2026
“>
அதேபோல், ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகிய டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் அதிமுகவில் இணைந்தார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக-விற்கும் அதிமுக-விற்கும் இடையே அரசியல் மோதல் நிலவி வரும் சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
