பானிபூரி பிரியர்களுக்கு ஒரு ‘ஷாக்’ நியூஸ். சாலையோரக் கடைகளில் பானிபூரி சாப்பிடும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சாட்சியாக ஒரு அருவருப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது நண்பருடன் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மசாலா பாத்திரத்திற்குள் ஏதோ அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Karan (@karan_dhanju26)

உற்றுப் பார்த்தபோது, அதற்குள் ஒரு எலி உயிரோடு நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அந்த கடைக்காரர் எலியை மீட்கப் போராட, மசாலா நனைந்த அந்த எலி பாத்திரத்தில் இருந்து குதித்து நேராகச் சாக்கடைக்குள் ஓடியது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அங்கீகாரம் பெற்ற பானிபூரியா?” என நக்கலடித்தும், “இந்தியாவின் உணவு பாதுகாப்பு இவ்வளவு மோசமாகவா இருக்கிறது?” என வேதனையுடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த கடைக்காரர் உடனடியாக அந்த மசாலாவைக் கொட்டிவிட்டாலும், பானிபூரி பிரியர்களின் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.