திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்றைய தலைமுறைக்குச் சில அதிரடியான கேள்விகளை முன்வைத்துள்ளது.

நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, “திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்கள் தான்.

அப்படி இருக்கும்போது, அவர்களுக்குள் எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் திருமணத்திற்கு முன்பே எப்படி உடலுறவில் ஈடுபட முடிகிறது என்பது புரியவில்லை” எனத் தங்கள் வியப்பைத் தெரிவித்துள்ளனர்.

“ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாகத் தெரியலாம், ஆனால் திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது; எதையும் செய்வதற்கு முன் அதன் விளைவுகளைப் பெண்கள் சிந்திப்பது அவசியம்” என நீதிபதி நாகரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடிக்க முடியுமா என ஆராய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைப் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.