வழக்கறிஞர் ரோஜா தனது ஆண் நண்பருடன் சென்னை நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றதும், அங்கு குளியல் தொட்டிக்குள் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ரோஜா குளியல் தொட்டிக்குள் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த காவல்துறையினர், ரோஜாவுடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பரைத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ரோஜாவின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர். சட்டத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் வழக்கறிஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.