உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மிஷனரி பள்ளியில், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அரிஷெரில் ஜோசப், மாணவிகளுக்குத் தண்டனை கொடுப்பதாகக் கூறி அவர்களைத் தனது அறைக்குத் தனியாக அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபரீதம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூற, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளிக்குள் புகுந்து அந்தத் தலைமை ஆசிரியரைச் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த போலீஸார், பெற்றோரிடம் இருந்து அந்த தலைமை ஆசிரியரை மீட்டு, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.

பள்ளிக் கூடத்திலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தச் சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.