சென்னை ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தயாளன் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் அண்மையில் திருடு போயின. இது குறித்து அவர்கள் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட நொளம்பூரைச் சேர்ந்த சுனில், சிலம்பரசன் மற்றும் ஹானஸ்ட் ராஜ் ஆகிய மூன்று இளைஞர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டன. விசாரணையில், கைதான சுனில் மீது ஏற்கனவே ஐந்து குற்றவழக்குகளும், சிலம்பரசன் மீது இரண்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

பிடிபட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.