உத்தரபிரதேசத்தில் கணவனை கழுத்து வரை குழியில் புதைத்து, அவருக்கு பால் மற்றும் பூக்களால் மனைவி பூஜை செய்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவத்தில், கணவன் தரையில் அமரவைக்கப்பட்டு உடல் முழுவதும் மண்ணால் மூடப்பட்டுள்ளது அவரது தலை மட்டுமே வெளியே தெரிகிறது.
மேலும் மனைவி மிகுந்த பக்தியுடன் கணவனின் தலையில் பால் ஊற்றி, மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபாடு செய்கிறார். இந்த வினோதச் செயல் அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் பெரும் அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபரீத செயலுக்குப் பின்னால் ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்லது விசித்திரமான நேர்த்திக்கடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் இது போன்ற செயல்கள் அறியாமையின் உச்சம் என்றும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இத்தகைய மூடநம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
